Menu

Thursday, 26 July 2018

அம்மாவின் மாதவிடாய்

பெண்பிள்ளைகளுக்கு அம்மா எப்போமே ஸ்பிஷல் தான்.

எனக்கு இன்றும் நினைவிருக்கிறது நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது , என்னை பள்ளியில் இருந்து அழைத்துச்செல்ல
மிதிவண்டியில் வந்து தான் என்னை அழைத்து செல்வார்கள்.
ஒரு நாள் அம்மா வர நேரமகிவிட நான் மிகவும் கோபத்துடன் இருந்தேன்.
பள்ளியில் இரும்பு கேட்டை பிடித்தபடி நின்று கொண்டிருந்தேன்.
அம்மா ஒரு 20 நிமிடங்கள் கழித்து வந்தார்கள்.

பள்ளியில் வேலை பார்க்கும் செகியூரிட்டி ஆயமா " என்னமா இன்னைக்கு கொஞ்சம் லேட்டா வந்து இருக்கீங்க னு கேட்டாங்க". ஆமா, ஆயமா இன்னைக்கு எனக்கு மின்சஸ் என்று சோர்ந்த முகத்துடன் பதில் கூறி என்னை அழைத்து சென்றார்கள் அம்மா.

மின்சஸ் நா என்ன என்ற குழப்பத்துடன் பதில் தெரியாமல் இருந்த குழந்தை பருவத்தில் மாதத்தில் ஒரு சில நாட்கள் மட்டும் மிகவும் சோர்ந்து , பலவீனமாக இருந்த அம்மாவை பற்றி பெரிதாய் புரிந்து கொள்ளவில்லை.

அம்மா ஏன் சோர்ந்து இருந்தார்கள் என்ற காரணம் நான் தெரிந்து கொண்ட வயதிற்க்கு பிறகு , நான் சோர்ந்து போகும் நாட்களில் என்னை ஒரு வேளை கூட செய்ய வைத்ததில்லை.

வலிகள் உணர்த்தும் வேதனைகள் தெரிந்தும் வியந்து போனேன், எப்படி அம்மா மாதவிடாய் நேரங்களிலும் எல்லா வேலைகளும் செய்கிறார்கள் என்று.

இன்று அதே குடும்ப பொறுப்பை நான் சுமக்கும் போது , மாதவிடாய் என்னை எந்த குடும்ப வேலைகள் செய்வதில் இருந்து விலக்கு கொடுக்கவில்லை.
வலிகள் ஒருபுறம் இருக்கட்டும் என்று வேலைகள் செய்து தான் ஆக வேண்டும்.

இன்று நினைத்து வருந்துகிறேன், மலையாய் இரும்பு மனுஷியாய் அத்தனை வேலைகள் செய்தவள் பாரத்தை, நானும் கொஞ்சம் சுமந்திருக்க வேண்டும்.
மாதவிடாய்களில் போது, வேளைகளில் இருந்து அவளுக்கு விலக்கு அளித்திருக்க வேண்டும்.

காலங்கள் தவரவிட்ட நான் கண்களில் கண்ணீரோடு , உன்னை நினைத்து கொண்டே இன்று என் குடும்ப வேலைகளை செய்கிறேன் ,மாதவிடாய் நேரங்களிலும்.

கரந்தோடும் அன்பை காட்டியவள்
உதிர்ந்தோடும் உதிரம் கொண்ட போதும்
சிதராதொறு  சிற்பம்மாய் திமிறி நின்று அரவணைத்து கொண்டிருந்தாய் எங்களை !

No comments:

Post a Comment