Menu

Kavithaigal_All


1. அவள் அழகில் மயங்கினேன்

மையிட்ட கண்களில் மயங்கி நிற்கிறேனடி –நான்
உன் சிவந்த இதழ்களில் சிக்கித் தவிக்கிறேனடி-உன்
மெல்லிய பேச்சினில் நான் மெய் மறக்கிறேனடி –நீ
நடக்கும் அழகினில் அத்தனையும் மறக்கிறேனடி
--ஹாசினி

2. கள்வா

என்னுல் ஊடுருவி என் தேகத்தை நெருங்க(ஆரய) உரிமை உண்டு உனக்கு மட்டும் கள்வா !
அடங்க பசியோ இந்த காமம் !
கொஞ்சம் வேகமாய் கூடிச் செல்லுது பள்ளி அறைக்கு என்னை !
பகல் மறைந்து இரவெழ சலனத்தது என் மனது !
மடியில் என் மணாளன் மடியில் மகிழ்ந்தெழ ஆசை !
என் மனுஷா உன்னோடு இத்தனை நெருக்கமாய் ஒரு ஜென்மம் முழுதும் இருக ஆசை !
இது போல் இன்னும் ஒரிரு ஜென்மம் வாழ ஆசை !
--ஹாசினி

3. அங்கிலம்

தத்தி தவழும் குழந்தை போலே !
தடுமடுகிறேன் நான்- ஏனோஅங்கிலேயா உந்தம் நாவில் சுழலும் ! !
தாய்மொழியை கற்றுக்கொள்ளவே சிரமப்படுகிறேன் தினம் தினம் ! ! !
--ஹாசினி

4. பெண்ணே

கவிதை எழுத நினைக்கிறன் ,
ஒவ்வொரு முறையும் பெண்ணே !
ஏன்னோ என் எழுதுகோல் ,
எழுதுகிறது உன் பெயரையே
எல்லா முறையும் ! ! ! ! ! !
--ஹாசினி

5. களவு

உன் கண்களாலே
என் கனவுகளை
களவாடிச் செல்கிறாய்
நீ தினம் தினம்
--ஹாசினி

6. கண்கள்

கண் மூடித்திறப்பதற்குள்
கணத்து விடுகிறது இந்த நெஞ்சம் !
கலங்கிவிடுமோ இந்த கண்கள் கொஞ்சம் !
கடைசியில் கண்ணியர் துளிகள்
மட்டுமே மிஞ்சும் !
என்தம் இதயத்தில் கண்ணீர் துளிகள் மட்டுமே மிஞ்சும் !
<
--ஹாசினி

7. எங்கே நீ(என் மனது) ?

என் நினைவுகள் கனவுகள் !
ஏக்கங்கள் தவிப்புகள் !
துன்பங்கள் இன்பங்கள் !
லட்சியங்கள் தடங்கள்கள் !
இவை எல்லாம் என்னுடன் இருக்க ,
என் மனது மட்டும் எங்கு சென்றது ?
--ஹாசினி

8. முதல் பார்வை

உன் முதல் பார்வையில் மொட்டுகளை
விழச் செய்தாய் என் இதயத்தில் .......
--ஹாசினி

9. வேலையை தேடி என் தேவதை (1)

காதல் அது கனிந்த பின்னும் கண்ணியின்
காலம் அது கனியவில்லையோ !
காயம் பட்ட இந்த இதயம் ஏனோ
உந்தன் காதல் மறக்க நினைக்கவில்லையோ !
உண்ணவும் மறந்து உறக்க மற்று
உலவிக் கொண்டிருகிறேன் உன் நினைவுகளாலே !
உந்தன் குரல் ஒலிக்க மறந்த நாட்களில்
ஊமை யென திரிகின்றேன்
சலனம் கொண்ட மனம் இது
சற்று சலிப்பு கொள்ளவும் இல்லையோ !
--ஹாசினி

வேலையை தேடி என் தேவதை (2)

உணர்வுகள் அத்தனையும் ஒன்றினைந்திட
என் நரம்புகள் எங்கும் உந்தன் நினைவுகள்
காலங்கள் மறந்து கண்ணியின் காலடி சுவடுகளை தேடுகிறேன்
ஆனால் கண்ணியோ காதல் மறந்து கடமை நோக்கி நடகிறாள் . . .
--ஹாசினி


வேலையை தேடி என் தேவதை (3)

உன் கூந்தல் வாசம் மறந்திடுமோ – கண்ணே
உன் முத்தங்களும் வேண்டாம் எனக்கு
ஒரு பகல்இரவு பொழுது மட்டும் கடன்
தருவாயா எனக்கு, என் காதல் அதை கொஞ்சம்
உயிர்பித்து கொள்ள ! ! !
--ஹாசினி

வேலையை தேடி என் தேவதை (4)

கொஞ்சல்களூம் இல்லை சிறு சிறு சண்டைகளும் இல்லை
தீண்டல்களும் இல்லை நெஞ்சம் தவித்து தேடல்களும் இல்லை
கல்லறை இருட்டை விடவும் கொடியதாய்
இருக்கதடி இந்த தனிமை நாட்கள்
--ஹாசினி

10. முங்கில்

நானொரு முங்கில் தானடா
ஒரு புல்லாங்குழலாய் மாறி உன்னை வருடுவதற்க்கு மட்டுமல்ல !
தேவைப்பட்டால் ஒரு முங்கில் பெரம்பாய் மாறிடுவேன் உன்னை
வெலுப்பதற்க்கும் கூட
--ஹாசினி

11. தேனீர் கோப்பை

தினம் நான் கண் விழிக்கையில் ,
என் கண்கள் படம் பிடிக்கும் முதல் பிம்பம் நீயாக வேண்டும்-அன்பே
தினம் நீ சுவைக்கும் தேனீர் கோப்பை நானாக வேண்டும் !
--ஹாசினி

12. நிலவின் மிது கொண்டுள்ள காதல்

என்னக்கும் ஆசை தான் ,
தினம் இரவு பொழுதை !
உன்னோடு மட்டும் கழித்திட ,
ஏனோ ஏமாற்றுகிறாய் என்னை !
அமாவசை அன்று மட்டும் நீ !
ஏமாற்றலின் கோபத்தை மறக்கிறேன் நீ பொர்ணமி அன்று !
உன் முழு வெளிச்சம் தருகையில் !
--ஹாசினி

13. நிலவிடம் ஒரு கேள்வி

அந்த நிலவிடம் கேட்கிறேன் !
தினம் தினம் ஆயிரம் கேள்விகளை !
பதில் கூற மறுத்து மௌனம் சாதிக்குது என்னிடம் !
விடை தராமல் விடை பெறுகிறது தினமும் கதிரவன் எழுகையில் !
--ஹாசினி

14. உன் அழகினாலே

உன் அழகினாலே சாகிறேனடி நான்
அமைதியாக அங்கும் உறங்க விடுவதில்லை
உயிர்த்தெழ செய்கிறாய் உன்
சிரிப்பினாலே ஒவ்வொரு முறையும் என்னை
--ஹாசினி

15. சம உரிமை

சம உரிமை வேண்டிடும் பெண்கள் சிலர் ,
சிறமமான வேளைகளை மட்டும்
ஆண்கள் தலையில் ஏற்றுவதேனோ !
--ஹாசினி

16. மதில் பூனை

முகத்திரை அணிந்திருகிறேன் – நான் !
என் மனம்யெனும் மதில் பூனை !
உள்ளிருக்கும் சோர்ந்த மனதிற்கும் !
வெளியிருக்கும் சிரிப்பு முகத்திற்கும் !
தாவிக் கொண்டிருக்கிறது திக்கு திசை தெரியாமல் !
--ஹாசினி

17. உன் மனம் புரிந்து

குப்பை தொட்டியாய் குவிந்து கிடந்தது என் மனது
கொஞ்சம் கலகலப்பூட்டினாய் உந்தன் கலாய்த்தலினால் !
கருமேகமென மூடிக்கிடந்த்து எமது சுழல்
மழைப்பொழிந்து மண் வாசம் வீசச் செய்தாய் என்னுள் !
மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேனடி நான் உன்னிடம்
இத்தனை நாட்கள் உன் மனம் புரிந்து கொள்ளத்தால் !
--ஹாசினி

18. அச்சிட்ட அந்த காகித்துக்காகவா ? ? ?

இங்கு யாரும் யாருக்காகவும் அழ போவதும் இல்லை
யாரும் யாருக்காகவும் இறக்கப்பட போவதும் இல்லை . . .
எதையோ தேடி ஓடிக் கொண்டு இருக்கும் இவர்களின் வாழ்வின்
அர்த்தம் தான் என்ன ! !
அச்சிட்ட அந்த காகித்துக்காகவா ? ? ?
இந்த போராட்டம் இந்த பொறாமை குணம் ! ! !
--ஹாசினி

19. அப்பா மகள் பிறிவு

அன்று பள்ளியின் இறும்பு கேட்டில் இடைவெளி கண்டோம் !
என் மகள் அவள் ஒரு அழகு தேவதை !
அந்த சின்னஞ் சிறு உதடுகளால் கெஞ்சியதும் கொஞ்சியதும் !
"அப்பா நானும் வரேன் வீட்டுக்கு கூட்டிப்போ ஸ்கூல் வேணாம்"
இன்று ஒரு கண்ணாடிக் கதவுகளில் அதே இடைவெளி கொண்டோம் !
நீ கையசைத்து விண்ணில் பாயும் விமானத்தில் பறந்து செல்கையில்
என் மனதிற்குள் அதே பாரம் கொள்கிறேன்- நான்
--ஹாசினி

20. திருவிழா ஊர்வலம்

கோவில் சிலையகிட ஆசைப்படுகிறேன்
அலங்கரித்த ஊர்தியில் அழகாய் அமர்ந்து
ஊர்வலம் சென்றிடவும்
முகத்தில் புண்ணகையுடன் மூன்றடுக்கு
பூ மெத்தையில்
தெருவெல்லாம் மின்விளக்குகள்
வரவேற்றிட , அறை தூக்க
பெண்டீயரிடம் ஆரதனை பெற்றிடுவேன் !
--ஹாசினி

21. தொலைந்துவிடாதே

பெண் அவள் உன்னவள் என்று ஊர்ஜினம் ஆகும் முன்
அவளிடம் உன்னை நீ தொலைத்து விடாதே ! ! !
--ஹாசினி

22. உன் புன்னகை

நீ என்னை விட்டு விலகி செல்லும் ஒவ்வொரு முறையும்
என் உயிர் துடிக்குதடி
உன் இதழ் ஓர புன்னகையில் உயிர் பிழைக்கிறேன் நான் ஒவ்வொருமுறையும்
--ஹாசினி

23. தண்ணீர் பஞ்சம்

தண்ணீர் பஞ்சம் தலை விரித்து ஆடுவது
தண்ணீர் குழாயில் மட்டுமல்ல என் கண்களிலும் தான்
அவனை நினைத்து உருகும் பொழுது
காதல் இதயம் மட்டுமல்ல கண்ணீரும் மறுத்து போனது
--ஹாசினி



No comments:

Post a Comment